சென்னை:
மிழக அரசு பாலாற்று பிரச்சினையில் மெத்தனம் காட்டியதால்தான் பிரச்சினை இன்று பூதாகாரமாகி உள்ளது.                 தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை: தமிழக அரசு  பாலாறு பிரச்சினையில் மெத்தனமாக செயல்பட்டுள்ளது.  பிரச்சினையை ஆரம்பத்திலேயே முறையாக கண்காணித்து  ஆந்திர முதல்வரிடம் பேசி அணை கட்டுவதை  தடுத்து   நிறுத்தும் முயற்சி எடுத்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கப்பட வில்லை என தமிழக அரசு மீது குற்றம் சாட்டினார்.
Dr.Tamilisai
புதுடெல்லியில் வரும் 16ந்தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் கலந்துகொண்டு, நமது மாநில பிரச்சினைகளை நமது அண்டை மாநில முதல்வர்களோடு கலந்துபேசி நமது மாநில உரிமைகளை பாதுகாக்கும் விஷயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நடைபெற்று வந்துள்ள கொலை, கொள்ளை, சுவாதி கொலை, விணுப்பிரியா தற்கொலை, ஐகோர்ட்டில் அரிவாள் வெட்டு, சிறார்கள் சீர்திருத்தப் பள்ளி மாணவர்கள் பிரச்சினை போன்றவற்றை பார்க்கும்போது தமிழக காவல்துறையில் கவனக்குறைவு, வீதி மீறல், மனித உரிமை மீறல் போன்ற செயல்கள் அதிகரித்து வருவதை காட்டுகிறது. போலீசாரின் மனஅழுத்தத்தை சரி செய்ய  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாதவாறு  தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இவ்வாறு  கூறினார்.