சென்னை:
மிழ்நாடு குடிசைபகுதி மாற்று வாரியம் மூலம் 23,476 வீடுகள் கட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதி வழங்கி உள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட் டுள்ள அறிக்கையில்  கடந்த 5 ஆண்டுகளில்  தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் பல்வேறு திட்டங்களின் வாயிலாக 59,023 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் மேலும், 3,024 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 7,513 தனி வீடுகள் என  10,537 வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளது.
tnslum
அதேபோல் இந்த ஆண்டும் 23,476 வீடுகள் கட்ட முதல்வர் உத்தரவிட்டுள்ளளார்.  இதில் சென்னை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, ஈரோடு, கோயம்புத்தூர், புதுக்கோட்டை, நாமக்கல்,  நாகப்பட்டினம் ஆகிய நகரங்களில்  7,204 அடுக்குமாடி குடியிருப்புகள் ,  பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு 157 பேரூராட்சிகள் மூலம், அவர்களது  சொந்த வீட்டுமனைகளில்  16,272 தனி வீடுகளும் கட்டி கொடுக்கப்படும்.
தனி வீடுகள் கட்டிக் கொள்பவர்களுக்கு அரசு மானியமாக 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.