71வயது இளைஞர்: அதிமுக எம்.பி.க்கு 3வது திருமணம்

Must read

 ராமநாதபுரம்:
திமுகவை சேர்ந்தவர் அன்வர் ராஜா. 71 வயதான இளைஞர். நேற்று 3வது திருமணம்  செய்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவரான இவர் ஏற்கனவே தமிழக அமைச்சராக இருந்துள்ளார். தற்போது  அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அதேபோல் தமிழ்நாடு சிறுபான்மை பிரிவு மாநில செயலாளராகவும் இருக்கிறார்.

அன்வர் ராஜா  3வது திருமணம்
                                    அன்வர் ராஜா 3வது திருமணம்                      

    இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது. முதல் மனைவியை விவாகரத்து (தலாக்) செய்துவிட்டு இரண்டாவதாக தாஜிதாவை திருமணம் செய்தார். உடல்நிலை சரியில்லாமல் கடந்த ஆண்டு தாஜிதா மரணத்தை தழுவினார். அன்வர் ராஜாவுக்கு 5 பிள்ளைகள் இருக்கிறது.
இதற்கிடையில் குர்ஷித் பானு என்ற 35 வயதுடைய வடமாநில பெண்ணை 3வதாக உறவினர்கள், மகன் மற்றும் மகள்கள், பேரன் பேத்திகள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்.
இந்த 3வது திருமணம் குறித்து அன்வர்ராஜா: நான் 71 வயதானாலும் இளமையாகத்தான் இருக்கிறேன், அதற்கு காரணம் தமிழ் இலக்கியம் படிக்கும் பழக்கம்தான் என்று கூறினார். மேலும் இந்த மூன்றாவது திருமணம் இஸ்லாமிய சட்டப்படி செய்த திருமணம். கருணாநிதி செய்தது போன்று சட்டப்பூர்வமில்லாத திருமணம் இல்லை என்றாராம்.

More articles

1 COMMENT

Latest article