அஜீத்துக்கு ஜோடியா… நோ சொல்லும் நடிகை!

Must read

ajth

அல்டிமேட் ஸ்டார் அஜீத்துக்கு ஜோடியாக நடிப்பதற்கு ஹீரோயின்களுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. ஆனால் ஒரு ஹீரோயின், “அஜீத்துக்கு ஜோடியாக மட்டும் நடிக்கவே மாட்டேன்” என்கிறார்.

அப்படிச் சொல்பவர்….  அஜீத்தின் மச்சினிச்சியான ஷாம்லிதான்!

ஆறு வருடங்களுக்கு முன்பே ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார். ஆனால் சொல்லிக்கொள்ளும்படியாக வாய்ப்புகள் அமையவில்லை. சற்று இடைவெளிவிட்டு தற்போது தீவிர முயற்சி செய்ததில் இரண்டு படங்களில் கமிட் ஆகியிருக்கிறார்.

“மிகப்பெரிய ஹீரோ உங்க வீட்டிலேயே இருக்கிறாரே.. அஜீத்! அவருக்கு ஜோடியா நடிப்பீங்களா” என்றால், “அய்யய்யோ.. வேண்டவே வேணாம்பா!” என்று பதறுகிறார் ஷாம்லி.

“ஏன்.. ஏன்.. ஏன்..?” என்றால், “அவர் ரொம்ப ப்ரண்ட்லியான மனிதர். அதனால் அவர்கிட்ட பயம் எல்லாம் கிடையாது. ஆனாலும், ஏனோ அவருக்கு ஜோடி என்பதை நினைச்சுகூட பார்க்க முடியலை…. அவர் நடிக்கிற படத்துல கெஸ்ட் ரோல் என்றால்கூட ஒப்புக்கொள்ள மாட்டேன்!”  என்கிறா்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article