அடுத்த பிரதமர் யார் என சரியாக சொன்னால் சொமோட்டோ பணம் வாபஸ்

Must read

டில்லி

ரும் மே 22 வரை சொமோட்டோ மூலம் உணவு வாங்குவோர் அடுத்த பிரதமர் யார் என சரியாக சொன்னால் அவர்கள் பணத்தை திரும்ப அளிக்க உள்ளது.

நேற்றுடன் நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் வாக்குகள் வரும் 23 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வர உள்ளன. இதை ஒட்டி பல கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. பிரபல உணவு வழங்கும் நிறுவனமான சொமோட்டோ நிறுவனமும் ஒரு கருத்துக் கணிப்பு அறிவிப்பை பரிசுடன் அறிவித்துள்ளது.

அதன்படி இந்த நிறுவனத்தின் செயலி மூலம் ஆர்டர் செய்ததும் செயலியில் அடுத்த பிரதமர் யார் என சொல்வதற்கு மூன்று தேர்வுகளை அளித்துள்ளது. அவை நரேந்திர மோடி, ராகுல் காந்தி மற்றும் வேறு ஒருவர் என மூன்று பெயர்களை அளித்துள்ளது. இதில் ஒருவரை தேர்வு செய்து அனுப்ப வேண்டும். இந்த போட்டி 22 ஆம் தேதி வரை உள்ளது.

வரும் 23 ஆம் தேதி அன்று தேர்தல் முடிவுகள் தெரிந்ததும் சரியான விடை அளிப்போருக்கு அவர்கள் உணவுக்கு அளித்த பணம் திருப்பி அளிக்கபடும் என அளித்துள்ளது. இதைத தவிர ஒரு சில உணவு விடுதிகளில் 40% கழிவு அளிக்கப்பட உள்ளது.

இது இந்த நிறுவனத்துக்கு முதல் முறை அல்ல. ஏற்கனவே ஐ பெ எல் போட்டிகளின் போது சரியான சாம்பியன் அணியை குறிப்பிட்டவர்களுக்கு பணம் திரும்ப அளிக்கபட்டது. இதன் மூலம் சுமார் 1.4 கோடி பேருக்கு ரூ.15 கோடி திரும்ப கிடைத்தது.

More articles

Latest article