ஐஸ்வர்யா ராய் குறித்த அவதூறு பதிவு : விவேக் ஓபராய்க்கு மக்கள் கண்டனம்

Must read

மும்பை

டிகை ஐஸ்வர்யா ராய் குறித்து அவதூறாக நடிகர் விவேக் ஓபராய் டிவிட்டரில் பதிந்ததற்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகையும் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் தற்போது அபிஷேக் பச்சனின் மனைவி ஆவார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஐஸ்வர்யா ராய் திரையுலகுக்கு வந்த புதிதில் அவருக்கும் சல்மான் கானுக்கும் இடையில் காதல் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் ஒரு சில சொந்த காரணங்களுக்காக இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.

அதன் பிறகு அவர் நடிகர் விவேக் ஒபராய் உடன் நடிக்கும் போது விவேக் ஓபராய் அவருடன் நெருங்கி பழக தொடங்கினார். இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக பலரும் பேசத் தொடங்கி வந்தனர். இது குறித்து ஐஸ்வர்யா ராய் எந்த ஒரு கருத்தும் சொல்ல மறுத்தார். ஆனால் விவேக் ஒபராய் இந்த செய்தியை உண்மை என வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.

அதன் பிறகு இருவருக்கும் பிரிவு ஏற்பட்டது. பிரபல பாலிவுட் நடிகரின் மகனான அபிஷேக் பச்சனுடன் ஐஸ்வர்யா ராய் நடிக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. அபிஷேக் பச்சனை அவர் குடும்ப ஒப்புதலுடன் ஐஸ்வர்யா ராய் மணந்தார். தற்போது அவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

விவேக் ஓபராய் பாஜகவில் இணைந்து பிஎம் நரேந்திர மோடி என்னும் படத்தில் ந்டித்துள்ளார். அந்த பட வெளியீடு தேர்தல் ஆணைய உத்தரவுப்படி தள்ளி போடப்பட்டது. பாஜக ஆதரவாளரான விவேக் ஓபராய் நேற்று டிவிட்டரில் கருத்து கணிப்பு பற்றி ஒரு பதிவு இட்டிருந்தார்.

https://twitter.com/vivekoberoi/status/1130380916142907392?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1130380916142907392&ref_url=https%3A%2F%2Fnewsd.in%2Fvivek-oberoi-crosses-a-line-shares-a-tweet-mocking-aishwarya-rai-bachchan%2F

அதில் ஒபினியன் போல் என சல்மான் -ஐஸ்வர்யா படத்தையும், எக்சிட் போல் என தான் மற்றும் ஐஸ்வ்ர்யா படத்தையும் ரிசல்ட் என ஐஸ்வர்யா ராய் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் உள்ள புகைப்படத்தையும் பதிந்துள்ளார். இந்த பதிவுக்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article