ஸ்பெயின்:

தெருவோரம் வசிப்பவருக்கு பிஸ்கட்டில் டூத்பேஸ்ட் கலந்து   கொடுத்து ப்ராங்க் செய்த ஸ்பெயின் யூட்யூப் பிரபலத்துக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.


ஸ்பெயினைச் சேர்ந்த கங்குவா ரென், யூட்யூப் பிரபலம், ப்ராங்க் செய்து, (அதாவது நம்ம ஊரில் சொல்வதென்றால் கலாய்த்து) பிரபலம் ஆனவர்.

52 வயதுடைய தெருவோரம் வசிக்கும் ஒருவருக்கு பிஸ்கட்டில் டூத் பேஸ்ட் கலந்து கொடுத்து ப்ராங்க் செய்திருக்கிறார். சாப்பிட்டவர் வாந்தி எடுத்துள்ளார்.

தெருவோரம் வசிக்கும் என்னை, இது போன்று யாரும் அவமதித்தது இல்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

இதனையடுத்து கங்குவா ரென் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

“வீடு இல்லாமல் தெருவில் வசிக்கும் நபரின் தார்மீகத்தை மீறி கங்குவா ரென் செயல்பட்டிருக்கிறார்.
எனவே, அவருக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட தெருவோரம் வசிப்பவருக்கு 22,300 டாலர் இழப்பீடாக அளி வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்த கங்குனா ரென், விளையாட்டுக்கு செய்தேன்” என்றார்.