வாஷிங்டன்

ளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இருந்து அமெரிக்கா இந்தியாவை நீக்கியதால் வர்த்தக ரீதியாக கடும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே அரசியல் மற்றும் ராணுவ உறவு போல வர்த்தக உறவு சுமுகமாக இல்லை.   உதாரணமாக  இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மோட்டர் சைக்கிள்களுக்கு அமெரிக்கா வரி விதிப்பதில்லை.  அமெரிக்கா இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளுக்கு இந்தியாவால் 100% வரி விதிக்கபபடுகிறது.    இது அமெரிக்காவுக்கு அதிருப்தி அளித்துள்ளது.

நீண்டகாலமாக வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் உள்ள நாடுகளுக்கு வர்த்தக முன்னுரிமை நாடுகள் என குறிப்பிட்டு அமெரிக்கா பல வர்த்தக சலுகைகளை வழங்கி வந்தன.    இந்த சலுகையின் கீழ் வரும் நாடுகள் அமெரிக்காவுக்கு வாகன உதிரிகள், ஜவுளிகள் என சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்களை வரி இன்றி ஏற்றுமதி செய்யலாம்.

கடந்த 2017 ஆம் ஆண்டில் இந்தியா அமெரிக்காவுக்கு சுமார் 39,600 கோடி வரையிலான பொருட்களை ஏற்றுமதி செய்தது.    சென்ற 2018 ஆம் ஆண்டு சுமார் ரூ.39,200 கோடி மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்தது.   இந்த பட்டியல் மூலம் அதிக பயன் அடைந்த நாடு என இந்தியா கூறப்பட்டது.  அதே நேரத்தில் இந்தியா பதிலுக்கு அமெரிக்காவுக்கு சலுகைகள் அளிக்கவில்லை என அமெரிக்காவால் கூறப்படுகிறது.

இதை ஒட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப், “அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா சமமான மற்றும் நியாயமான வாய்ப்பு வழங்குவதில்லை.   அதனால் நாங்கள் வரும் ஜூன் 5 முதல் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்க உள்ளோம்.   இதனால் இனி இந்தியா பயன் பெறும் நாடுகள் பட்டியலிலும் இடம் பெறாது “ என அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சலுகையினால் வரி விலக்கு கிடைத்ததால் வருடத்துக்கு சுமார் ரூ.39200 கோடி வரை ஏற்றுமதி செய்து வந்த இந்தியாவுக்கு இது மிகவும் பெரிய பின்னடைவாகும்.  தற்போது வரிவிதிப்பு அதிகமாகும் என்பதால் இந்திய பொருட்களின் விலை அமெரிக்காவில்  கணிசமாக உயரும்.  ஆகவே அமெரிகக சந்தையில் இந்திய பொருட்களுக்கு கிராக்கி குறையும்.

இதனால் இந்தியா முந்தைய அளவுக்கு இப்போது ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ள்து.   இந்தியா தற்போது கடும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது.   இந்நிலையில் அமெரிக்கவுடனான வர்த்தகம் பாதிப்பதால் இந்திய பொருளாதாரம் மேலும் பின்னடைய வாய்ப்புக்கள் உள்ளது என கூறப்படுகிறது,