புதுடெல்லி:

ஜெட் ஏர்வேஸில் பணியாற்றிய 2 ஆயிரம் பைலட்கள் மற்றும் ஊழியர்களை பணியமர்த்த ஸ்பைஸ் ஜெட் முடிவு செய்துள்ளதாக, அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அஜய்சிங் தெரிவித்துள்ளார்.


நிதி நெருக்கடி காரணமாக ஜெட் ஏர்வேஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதில் பணிபுரிந்த பைலட்கள் மற்றும் ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், இதுவரை 1,100 ஸ்பைஸ் ஜெட் ஊழியர்களை பணியமர்த்தியுள்ளோம். 2 ஆயிரம் ஊழியர்கள் வரை பணியமர்த்துவோம்.

தற்போது ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திடம் 14 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 100 விமானங்களை இயக்கி வருகின்றோம்.

ஜெட் ஏர்வேஸ் மற்றும் இண்டிகோவின் 100 விமானங்களை ஸ்பைஸ் ஜெட் இயக்குகிறது. இந்த ஆண்டு எங்களுக்கு குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.