விபத்தில் சிக்கியோருக்கு உதவாமல் வீடியோவா? :ஜெர்மன் போலிஸ் நடவடிக்கை

Must read

ஃப்ராங்க்ஃபர்ட்

ஜெர்மனியில் சாலை விபத்தில் சிக்கியோருக்கு உதவாமல் விடியோ எடுத்தவருக்கு அந்நாட்டு காவல்துறை அதிகாரி புதுமையான நடவடிக்கை எடுத்துள்ளார்.

உலகெங்கும் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில் விபத்தில் சிக்கியோருக்கு உதவாமல் அதை வீடியோவாக பதிவு செய்வதும், சமூகவலை தளங்கலில் பதிவதும் அதை விட அதிகரித்து வருகின்றன. அதை தடுக்க ஜெர்மன் நாட்டின் காவல்துறை அதிகாரி ஒரு புதிய நடவடிக்கை எடுத்துள்ளார். அந்த வீடியோ வலை தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் இவ்வாறு வீடியோ எடுக்கும் ஒரு பயணியை காவல் அதிகாரி தடுத்து நிறுத்துகிறார்,

அதிகாரி : நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? ஹங்கேரியா ? போலந்தா?

பயணி : செக்

அ : செக் குடியரசா? வாருங்கள். உங்களுக்கு ஒரு நிகழ்வை காட்ட விரும்புகிறேன். உங்களுக்கு இறந்தவர்களை காண வேண்டுமா? படங்களா? வாருங்கள் (பயணியை அழைத்துச் செல்கிறார்)  அங்கே தான் இறந்தவர் உள்ளார். பார்க்கிறீர்களா?

ப : வேண்டாம்

அ : வேண்டாமா? பின்பு ஏன் புகைப்படம் எடுத்தீர்கள்? நீங்கள் இறந்தவர் அருகில் சென்று அவருக்கு ஹலோ சொல்லலாம். வாருங்கள் நீங்கள் தற்போது விபத்தை படம் எடுத்தற்கு 128.50 யூரோ செலுத்த வேண்டும்.

ப : (தடுமாற்றம்)

அ : உங்களை நினைத்து அவமானம் கொள்கிறேன். நீங்கள் செய்தது நல்லது அல்ல. உங்களுடைய ஓட்டுனர் உரிமம், வாகன ஆவணம் மற்றும் பாஸ்போர்ட்டை பார்க்க விரும்புகிறேன்.

(பயணியை மேலும் அழைத்துச் செல்கிறார்)

அதிகாரி : அவரை பாருங்கள் ஹங்கேரியில் இருந்து வந்துள்ளார். அவரை பார்க்க வாருங்கள்.

ப : வருந்துகிறேன். புகைப்படத்துக்காக மேலும் வருந்துகிறேன்

அ : அவரை பார்க்க விரும்பவில்லையா? ஏன் புகைப்படம் எடுத்தீர்கள்? நேரடியாகவே பாருங்கள் உங்கள் நாட்டில் இருந்து வந்தவரை நீங்கள் பார்க்க மாட்டிர்களா? உங்களுக்காக நான் அவமானம் அடைகிறேன்.

ப : மன்னிக்கவும்

பயணி அங்கிருந்து செல்கிறார்

நம்மை நோக்கி அதிகாரி சொல்கிறார்.

அ : நம்மால் மக்கள் மனநிலையை நிச்சயம் மாற்ற முடியும். அவர்களிடம் இருந்து 128.50 யூரோ அபராதம் வாங்கி விட்டு அனுப்பி விட்டால் அவர்களுக்கு நடந்தவைகளை பற்றி எதுவும் உணர முடியாது. தாம் செய்வது தவறு என்பதை அவர்களே தெரிந்துக் கொள்ள மக்களுக்கு இவ்வாறான அதிர்ச்சி அவசியம் தேவை, இது போல அதிர்ச்சியை அளிப்பதால் மக்கள் இது ஒரு விளையாட்டல்ல என்பதையும் இதன் கசப்பான உண்மை தன்மையையும் புரிந்துக் கொள்வார்கள்.

நமது வாசகர்களுக்காக இதோ அந்த வீடியோ

[youtube https://www.youtube.com/watch?v=0ZFSLRgSbuI]

More articles

Latest article