டிடிஎப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய போக்குவரத்து ஆணையகம் பரிந்துரை செய்துள்ள நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாலையில் செல்லும் சகவாகன ஓட்டிகளையும் மக்களையும் அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டுவது மற்றும் பைக் சாகசத்தில் ஈடுபடுவதன் மூலம் சிறார்கள் மற்றும் இளம் வயதினரிடையே பிரபலமான யூ டியூபர் டிடிஎப் வாசன் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அருகே பாலுச்செட்டி சத்திரத்தில் அதிவேகமாக பைக் ஒட்டிச் சென்று வீலிங் சாகசத்தில் ஈடுபட்டு நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்டு விபத்தில் சிக்கிய வாசன் மீது ஏற்கனவே 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது மேலும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.‘  டிடிஎஃப் வாசன் சென்னையில் அவரது நண்பர்  அபிஸ் என்பவரின் வீட்டில்  தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கு சென்ற  காஞ்சிபுரம் போலீசார்  வாசனை கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே வாசனின் ஓட்டுநர் உரிமத்தை  ரத்து செய்ய தமிழக காவல்துறை  பரிந்துரை செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பிணையில் வெளிவர முடியாதபடி டிடிஎஃப் வாசனை காவல்துறை கைது செய்து பழிதீர்த்துக்கொண்டுள்ளது.

டிடிஎப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை