டெல்லி: தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு 5,000 கன அடி நீர் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் நேற்று (18ந்தேதி) காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் மத்திய நீர்வளத்துறை தலைவர் தலைமையில் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் கலந்துகொண்ட நிலையில், கர்நாடகா, புதுச்சேரி அரசு அதிகாரிஅக்ளும் காணொலி வாயிலாக பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு அரசு அதிகாரிகற்ள, கர்நாடகாவில் இருந்து விநாடிக்கு 12,500 கன அடி வீதம் 15 நாட்கள் நீர் திறக்க தமிழ்நாடு கோரிக்கை வைத்தது. மேலும், காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவுபடி 5,000 கன அடி நீரை வழங்கவில்லை என கர்நாடக மீது தமிழ்நாடு புகார் கூறியது.
இதற்கு கர்நாடக மாநில அரசு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடகாவில் போதிய மழை பெய்யாத காரணத்தால் தண்ணீர் திறந்து விட முடியாது என வலியுறுத்தினர்.
இதையடுத்து தமிழ்நாட்டிற்கு தினசரி 5,000 கன அடி காவிரி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
காவிரியில் போதுமான தண்ணீரை கர்நாடக காங்கிரஸ் அரசு திறந்துவிட மறுத்து தமிழ்நாடு விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. டெல்டா விவசாயிகளின் அடிப்படையாக உள்ள காவிரி நீர் தற்போது, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் அரசியல் பிரச்னையாகவும் மாறியுள்ளது. ஏற்கனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி தமிழ்நாட்டிற்கு உரிய நீரை வழங்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரு ம் செப்டம்பர் 21-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.