பெங்களூரு:

க்கோடா விற்று தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கலாம் என்று வேலைவாய்ப்பு குறித்து மோடி பேசியதைக் கண்டித்து, பெங்களூருவில் உள்ள பாஜக அலுவலகம் முன் பக்கோடா கடை திறந்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.

கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி, வேலை வாய்ப்பு குறித்து பேசும்போது, ”இந்தியாவில் ஒரு இளைஞன் பக்கோடா விற்று வீட்டிற்கு 200 ரூபாய் கொண்டு சென்றால் அவன் வேலை வாய்ப்பு உள்ளவன் என்றுதானே அர்த்தம்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன.

ஹர்திக் பட்டேல், “டீக்கடைக்காரர் இப்படித்தான் பேசுவார். அவர்கள்தான் பக்கோடா கடை வைத்தால் வேலைவாய்ப்பு உருவாகிவிட்டதாக நினைப்பார்கள். அவர் கண்டிப்பாக பொருளாதாரம் குறித்து எதுவுமே தெரியாமல் இருக்கிறார்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், பெங்களூரு இளைஞர்கள் அங்குள்ள பா.ஜ.க அலுவலகம் முன் பக்கோடா கடை திறந்து வித்தியாசமான போராட்டம் நடத்தினர்.

அவர்கள், “இளைஞர்களுக்கு புது, வேலை வாய்ப்பை உருவாக்காத மோடி, பக்கோடா விற்கச் சொல்கிறார். இதைக் கண்டித்தே இந்த போராட்டத்தை நடத்துகிறோம்” என்றனர்.