இலவசமாக மது அளிக்காத புதுச்சேரி மதுக்கடையை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்

Must read

வில்லியனூர்

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் இலவசமாக மது கொடுக்காத மதுக்கடையை 3 இளைஞர்கள் அடித்து நொறுக்கி உள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள  வில்லியனூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மதுக் கடைக்கு நேற்று இரவு மூன்று இளைஞர்கள் வந்துள்ளனர்.  அவர்கள் தங்களுக்கு இலவசமாக மது வேண்டும் எனக் கடையில் இருந்த காசாளரிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது,

அவர் அவர்களுக்கு இலவசமாக மது தர மறுத்துள்ளார்.  இதை அடுத்து ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் காலி பீர் பாட்டில்கள் மற்றும் கற்களால் மதுபானக் கடையைத் தாக்கியுள்ளனர்,  இக் காட்சி அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது,  பதிவான சிசிடிவி காட்சிகளுடன் கடையின் காசாளர் வில்லியனூர் காவல் நிலையத்தில் அளித்தார்.

அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். மதுபானக் கடையைத் தாக்கியது வில்லியனூர் மூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், பிரபா மற்றும் ஸ்டீபன் என்று தெரியவந்துள்ளதால் காவல்துறையினர் அவர்களைத் தேடி வருகின்றனர்.

More articles

Latest article