2021 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது தி.மு.க.

சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படாது என்று தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது.

மேலும், இளைஞர் சுய முன்னேற்ற குழுக்கள் அமைக்க ஊக்குவிப்பதோடு, இந்த குழுக்கள் மூலம் தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு 25 சத மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கும் இளைஞர் சுய முன்னேற்ற குழு திட்டம் கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஓய்வூதியம் பெரும் அரசு ஊழியர்களுக்கு 70 வயது நிரம்பியவுடன் ஓய்வூதியத்தில் 10 சதம் உயர்வும் 80 வயது நிறைந்தவுடன் மேலும் 10 சத உயர்வும் வழங்க வகை செய்யப்படும் என்றும் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது, தற்போது 80 வயது பூர்த்தி அடைந்த பின் 20 சத உயர்வு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதுபோல், பணி காலத்தில் மரணமடையும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குடும்ப நல நிதி 3 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும்,

சாய பட்டறைகள் சாய கழிவுகளை அகற்ற, கழிவு அகற்றும் பொதுவான சுத்திகரிப்பு வசதி (சி.இ.டி.பி) அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.