மைசூரு:

டிக்டாக் பொழுதுபோக்கு செயலின் விபரீதம் காரணமாக, கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் ஒருவர்  கழுத்து முறிந்து உயிருக்கு போராடி வருகிறார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலகமுழுவதும் இன்று மிகவும் பிரபலமான மியூசிக்கல் செயலியான டிக்-டாக் செயலி  தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றனர். இந்த செயலியை பயன்படுத்தி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீடியோ பதிவிட்டு வருகிறார்கள்.

குறிப்பாக இளம் வயதினர் ‘டிக்-டாக்’ செயலியை பயன்படுத்தி நடனமாடுவதுடன், வசனங்கள் பேசி நடித்து வருகிறார்கள். இன்னும் சிலர் அதிக லைக், ஷேர்களை பெற வேண்டும் என்பதற்காகவும், பயனர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும் விபரீத செயல்களில் ஈடுபடு வருகின்றனர்.

இந்த நிலையில்,  கர்நாடகாவின் துமகூரு பகுதியைச் சேர்ந்த 19 வயது யங்பாய் குமார் என்ற இளைஞர்,  இவர் டிக் டாக்கில் வீடியோ பதிவிடுவதற்காக நண்பரின் உதவியுடன் பேக் பிலிப் எனப்படும் பின்புறமாக குதித்தலில் ஈடுபட்டார்.

அப்போது,சரியான நிலையில், அவர் கால்களை தரையில் ஊன்ற முடியாமல் அவர் தடுமாறி தலைகுப்புற விழுந்தார். அவரது தலை நேரடியாக தரைலயில் மோதிய நிலையில், அவரது கழுத்து எலும்பு உடைந்து அப்படியே அசைவற்று கிடந்ததார்.

இதைக்கண்ட அவரது நண்பட அதிர்ச்சி அடைந்து,  உடனடியாக யங்பாய் குமாரை மீட்டு அருகில்  உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குமாரின் முதுகெலும்பு முழுவதையும் ஸ்கேன் செய்துள்ள மருத்துவர்கள் தற்போதைக்கு அவரின் நிலைமை குறித்து எதுவும் கூற முடியாது என்று தெரிவித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒவ்வொருவருக்கும் முதுகெலும்புதான் உடலுறுப்புகளின் செயல்பாட்டுக்கு முக்கிய ஆதாரம் . ஆனால், தற்போது அது முறிந்து போயுள்ளதால், குமாரின் எதிர்காலமே முடங்கி போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.