சென்னை: ரூ.2ஆயிரம் உடன் மளிகை பொருட்களை ரேசன் அட்டைதாரர்கள் இம்மாதம் இறுதிவரை பெற்றுக்கொள்ளலாம்! என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து உள்ளார்.

கொரோனா ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகஅரசு, அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4000 நிவாரணமும், 14வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த மாதம் நிவாரண தொகையின் ஒரு பகுதியாக ரூ.2000 அனைவருக்கும் வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள ரூ.2000 உடன் மளிகை பொருட்கள் தொகுப்பு ஜூன் 15ந்தேதி முதல் மக்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி,  நாளைமுதல் ரேஷன் கடைகளில் ரூ.2000 உடன்  14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு விநியோகிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில்,  செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நாளை முதல் இந்த மாத இறுதிவரை பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தாவனையான ரூ.2,000-த்தையும் நாளை முதல் பெற்றுக் கொள்ளலாம்.

ஒரு நியாயவிலை கடைகளில் 75முதல் 200 பேருக்கு தினசரி மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்படும். மளிகை பொருட்கள் வழங்க யாராவது பணம் பெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் .

இவ்வாறு அவர் கூறினார்.