பூஜை புன்ஸ்காரங்களுடன் சட்டமன்ற அலுவலகத்தை திறந்தார் வானதி சீனிவாசன்….

Must read

கோவை: இன்று கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசனின் பயன்பாட்டுக்கான சட்டமன்ற அலுவலகம் இன்று பூஜை புனஸ்காரங்களுடன் மங்களகரமாக திறக்கப்பட்டு உள்ளது. திறக்கப்பட்டது.

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்குதொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். இதையடுத்து, அவரது சட்டமன்ற அலுவலக கட்டிடம் இன்று திறக்கப்பட்டு உள்ளது. முன்னதாக, சட்டமன்ற அலுவலகத்தில் கணபதி ஹோமம் உள்பட பூஜைகள் நடைபெற்றன. இதில், வானதி சீனிவாசன், தனது கணவருடன் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து, சட்டமன்ற  அலுவலகத்திற்குள் வலதுகாலை எடுத்து வைத்து வந்த வானதி, அங்குள்ள இருக்கையில் அமர்ந்தார். தொடர்ந்து கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் ஆசி பெற்றார்.

 

 

More articles

Latest article