டான்செட் நுழைவுத்தேர்வுக்கு மார்ச் 30 முதல் விண்ணப்பிக்கலாம் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

Must read

சென்னை:
டான்செட் நுழைவுத் தேர்வுக்கு வரும் 30-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வரும் கல்வியாண்டில் MBA, MCA, M.E., http://M.Tech., M.Plan., M.Arch., படிப்புகளில் சேர TANCET நுழைவுத் தேர்வுக்கு வரும் 30-ம் தேதி முதல் ஏப்ரல் 18-ம் தேதி வரை https://tancet.annauniv.edu/tancet இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

எம்சிஏ படிப்பிற்கு வருகிற மே 14ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடைபெறும் என்றும் , எம்பிஏ படிப்பு இருக்கு மே 14-ஆம் தேதி 2:30 முதல் 4:30 மணி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும் எம்இ, எம்டெக், எம்ஆர்க் , எம் பிளான் உள்ளிட்ட படிப்புகளுக்கு மே 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

More articles

Latest article