தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார் நடிகர் யோகி பாபு.

சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட அவரது மண்டேலா படத்தைப் பற்றின சிறப்பு அப்டேட் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் மதோனி அஸ்வின் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை ஒய்.நாட் ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் மற்றும் விஷ்பெர்ரி நிறுவனங்களுடன் இணைந்து ‘மாரி’ இயக்குனர் பாலாஜி மோகன் தனது ஓபன் விண்டோ தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

இந்நிலையில், இந்த படம் விஜய் டிவியில் நேரடியாக வெளியிடப்படுவதாக இருக்கிறது என்று ஏ.ஆர்.முருகதாஸ் டீவீட் செய்துள்ளார். மேலும் “இதோ #Mandela டிரெய்லர்! சரியான நேரத்தில் பொருத்தமான கன்டென்ட் 🙂 உலகம் முழுவதும் விஜய் டிவியில் ஏப்ரல் 4 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது” என்று கூறியுள்ளார்.