க்னோ

ந்தியாவின் முதல் தனியார் ரயிலை இன்று லக்னோவில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் முதல் தனியார் ரயிலான லக்னோ – டில்லி தேஜாஸ் எக்ஸ்பிரஸ் இன்று முதல் தனது சேவையைத் தொடங்கி உள்ளது.  இதே ரெயில் எதிர்ப்பாதையில் டில்லியில் இருந்து லக்னோ செல்கிறது.    இந்த ரயில் கால 6.10 மணிக்கு லக்னோவில் இருந்து கிளம்பி மதியம் 12.25க்கு டில்லி வந்தடைகிறது.

மறு பாதையில் மாலை 3.25க்கு டில்லியில் இருந்து கிளம்பும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் இரவு 10.05 மணிக்கு லக்னோ வந்தடைய உள்ளது.  இந்த ரயில் சேவையை இன்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இன்றைய முதல் நாளில் முதல் பயணமாக 389 பேர் பயணம் செய்கின்றனர்.  இந்த ரயில் கான்பூர் மற்றும்கசியாபாத் ஆகிய இரு ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.  இந்த ரயில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் சேவையைச் செய்யும்.