மும்பை

பொருளாதார வளர்ச்சி 0.8% குறைந்து 6.1% ஆக இருக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்தியப் பொருளாதார வளர்ச்சி நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருவதாகப் பல பொருளாதார ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.  இதைச் சரி செய்ய அரசு கார்ப்பரேட் வரி விகிதத்தைக் குறைத்தது.   அத்துடன் வங்கிகளும் வட்டி விகிதத்தைக் குறைத்து வருகின்றன.   இந்நிலையில் இன்று ரிசர்வ் வங்கியின் இரு மாதத்துக்கு ஒரு முறை நடக்கும் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

அந்தக் கூட்டத்தின் முடிவில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.1% ஆக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.  முன்பு இந்த வளர்ச்சி 6.9% ஆக இருக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.   ஆயினும் இந்த நிலை இந்த நிதி ஆண்டின் இரண்டாம் பகுதியில்  முன்னேற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வரும் ஆண்டு அதாவது 2020-21 நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி முன்னேறும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.   அடுத்த வருடம் பொருளாதார வளர்ச்சி 7.2% ஆக இருக்கும் என கணிப்பு தெரிவித்துள்ளது.