உத்திரப் பிரதேச முதல்வராய் சர்ச்சைக்குரிய யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்து வருகின்ன்றது. தற்போது அவர் தம்து வலைத்தளத்தில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் வீரமான, உறுதிமிக்கப் பெண்கள் அரக்க குணத்தை பெருகின்றனர் என்று கூறியுள்ளார். அவரது கருத்துப் படி பார்த்தால், தங்களின் வீரம் மற்றும் உறுதிபாட்டால் இந்திய வரலாற்றில் இடம் பிடித்த ராணி லட்சுமி பாய், கல்பனா சாவ்லா, கேப்டன் லக்ஷ்மி சாகல் மற்றும் பி.வி. சிந்து ஆகியோரை ‘அரக்கிகள்’ ஆவர்.

திங்கள்கிழமை ஆதித்யநாத் தமது வலைத்தளத்தில் கட்டுரை எழுதியுள்ளதை காங்கிரஸ் கட்சி சுட்டிக்காட்டி பாஜகவை குற்றம் சாட்டியுள்ளது. முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது, உத்திரப் பிரதேச முதல்வர் தனது வலைத்தளத்தில் ஒரு கட்டுரையை எழுதியதன் மூலம் பெண்களை அவமானப்படுத்தி, பலாத்காரம் செய்துள்ளாரென காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது.

ஒரு புறத்தில் பெண்களின் குணாதிசயங்களைப் போற்றி எழுதியுள்ள ஆதித்யநாத், ஹிந்து வேதங்களிலிருந்து சமஸ்கிருத நூல்களை மேற்கோள் காட்டி, ஒரு பெண் தைரியம் மற்றும் வீரம் போன்ற ‘ஆண்மைப்’ பண்புகளையும் குணாதிசயங்களையும் பெற்றிருந்தால், அவள் ஒரு ‘அரக்கி’ என்று குறிப்பிட்டுள்ளார். உ.பி. முதல்வரின் கருத்துப் படி, இத்தகையப் பெண்களின் ஆற்றல் கட்டுப்படுத்தப்படாமல் விட்டுவிட்டால் அது ‘அழிவு’ ப் பாதைக்கு இட்டுச் செல்லும்.

“உத்திரப்பிரதேச முதலமைச்சர் www.yogiadityanath.in எனும் தனது இணையத்தளத்தில் பெண்ணியம் மீதான தன் கட்டுரையில் இந்த விமர்சனத்தைக் கூறியுள்ளார்” எனக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

அவ்வாறு கருத்து தெரிவித்திருப்பதன் மூலம், அவர் இந்தியர்கள் பெரும்பாலோரை ஆத்திரமூட்டியுள்ளதுடன் காங்கிரசுக்கு பா.ஜ.க வை சிதறடிக்க(விமர்சிக்க) நல்ல வெடிமருந்துகளையும் வழங்கியுள்ளார்.

ஆதித்யநாத்தின் ஹிந்தி (மத்ரி சக்தி, பாரதிய சமஸ்கிருதி கே சாந்தர்ப் மெயின்) கட்டுரையில் பெண்களுக்கு எதிரான கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திய பெண்களை அவமதிக்கும் மற்றும் வெறுக்கத் தக்க கருத்துக்களை” எழுதியதற்காக உத்தரபிரதேச முதல்வர் யோகி பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும், அந்தச் சர்ச்சைக்குரிய கட்டுரையை உடனடியாகத் தனது வலைத்தளத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

திங்களன்று, காங்கிரஸ் தலைவர் ரண்டீப் சுர்ஜேவலா, “பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தலைவர் அமித் ஷா ஆகியோர், முதல்வர் ஆதித்யநாத்தின் இந்தியாவின் பெண்களுக்கு எதிரான அவமதிப்பு மற்றும் வெறுக்கத் தக்க கருத்துக்களை கண்டிக்க வேண்டும். மேலும், யோகிக்கு இனி பெண்கள் சக்தியை அவமானப்படுத்தி, அவமதிக்கும் வகையில் அத்தகைய வெறுப்புணர்வு மொழியை அவர் எப்போதும் பயன்படுத்தக் கூடாது என்றும் தகுந்த ஆலோசனையளிக்க வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமையன்று, ஒரிசாவில், பிரதமர் மோடி, இந்தியாவில் பெண்களுக்குச் சமத்துவம் குறித்துப் பேசினார், இந்திய பெண்களுக்கு மரியாதை மற்றும் மரியாதை பற்றிப் பேசினார் மற்றும் ஒடிசாவில் மதம், சாதி, மதம் அல்லது வண்ணம் பொருட்படுத்தாமல் இந்திய பெண்களுக்கு எதிரான அநீதிகளை எதிர்த்துப் பேசினார். ஆனால், பிரதமரின் எண்ணங்களுக்கு நேரெதிரான கருத்துக்கள் கொண்ட கட்டுரையை உ.பி. முதல்வர் யோகி கூறியுள்ளது பா.ஜ.க.வின் மனோபாவம் என்ன என்பதைப் பிரதிபலிக்கிறது, “என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜிவாலா தெரிவித்தார்.

மேலும் இந்தக் கட்டுரையில், ஒரு பெண் எப்போதும் அவளுடைய தந்தை, கணவன் அல்லது அவளுடைய மகன் ஆகியோரால் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறார். ஒரு பெண் ஒருபோதும் சுயாதீனமாக இருக்க முடியாது. ஒரு பெண் சுயாதீனமாக தீர்மானிக்கத் தகுதியுடையவர் அல்ல. எனவே, எப்போதும் வெவ்வேறு வடிவங்களில் ஆண்கள் பாதுகாப்பு பெண்களுக்குத் தேவை.

ஒரு பெண் சக்திவாய்ந்தவளாகவும் தைரியமாகவும் இருந்தால், ஒரு பெண் ‘புருஷித்’ அல்லது ‘ஷாரியா’ என்று அழைத்தால், அவள் ஒரு ‘ரக்ஷஸ்’ (அரக்கன்) ஆகப் போகிறாள்! எண்டுர் கூறியுள்ளது குறித்து ஐந்து கேள்விகளைப் பிஜேபி மற்றும் ஆதித்யநாத் ஆகியோருக்கு காங்கிரஸ் முன்வைத்துள்ளது.

1) இந்த நாட்டில் உள்ள பெண்கள் சொந்தக் காலில் நிற்கக் கூடாதா? அவர்கள் பா.ஜ.க.வின் லென்ஸ்கள் மூலம் எப்பொழுதும் பார்க்கப்பட வேண்டுமா?
2) பெண்கள் சுயாதீனமாக இருந்தால், ‘அழிவுச் சக்தி மற்றும் அரக்கிகளா? இதுதான் பா.ஜ.க.வின் கொள்கை மற்றும் உண்மைமுகமா?
3) இந்த நாட்டில் உள்ள பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியாதவர்கள். எப்போதும் தந்தை, கணவன் மற்றும் மகன் ஆகியோரின் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்று பிஜேபி நினைக்கிறதா?
4) பெண்கள் சுதந்திரமாக இருக்கக் கூடாது என்று பாஜக நினைத்தால், இந்தியாவில் பெண்கள் விலங்கிடப்பட்டு அடைத்துவைக்கப்பட வேண்டுமா?
5) வீரம் துணிவு மற்றும் தைரியத்தின் அடையாளமாக விளங்கும் துர்கா, காளி அல்லது ராணி லக்ஷ்மி பாய், கேப்டன் லட்சுமி சாகல் போன்ற சுதந்திர போராளிகளாக இருக்கும் பெண்களைப் பாஜக, ஆதித்யநாத், மோடி, ஷா ஆகியோர் எப்படி அழைப்பீர்கள்? அரக்கிகள் என்றா?

இவ்வாறு காங்கிரஸ் எழுப்பியுள்ள குற்றச்சாட்டிற்கு பாஜக விளக்கமளிக்கவில்லை.