ரேலி

பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இந்து யுவ வாகினியை சேர்ந்த மூன்று தொண்டர்கள் பாலியல் பலாத்கார புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யோகி ஆதித்யநாத்தின் ஆசி பெற்ற தொண்டு நிறுவனம் இந்து யுவ வாகினி.   வாகினியின் தொண்டர் அவினாஷ் என்பவர் தலைமையில் பரேலி நகரின் கணேஷ் நகர் என்னும் இடத்தில் சத்தமாக ஒலிபெருக்கி மூலம் இசையை ஒலிபரப்பினர்.   இதை அதே பகுதியைச் சேர்ந்த தீபக் என்பவர் தட்டிக்கேட்டார்.

அவினாஷ் தனது நண்பர்களுடன் தீபக் வீட்டுக்குச் சென்று கூச்சல், ரகளையில் ஈடுபட்டு,  அந்த வீட்டில் உள்ள பெண்களிடம் அனைவரும் தவறாக நடந்துக் கொண்டுள்ளனர்.    செய்தியறிந்து தனது சகோதரர் கவுரவுடன் வீட்டுக்கு வந்த தீபக் அனைவரையும் அடித்து, உதைத்து, போலீசில் பிடித்துக் கொடுத்தார்.

செய்தி பரவியதால், இந்து யுவ வாகினியின் தலைவர்களும், தொண்டர்களும், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.   அமைதியை நிலை நாட்ட உள்ளூர் பாஜக பிரமுகர் உமேஷ் கத்தாரியா அங்கு வந்து இரு தரப்பினரையும் சமாதானப் படுத்த முயன்றார்     ஆனால், அவரையும், இன்ஸ்பெக்டர் மயன்க் அரோராவையும் போராட்டக்காரர்கள் தாக்கினார்கள்.

அங்கு வந்த எஸ் பி அமைதியை நிலைநாட்டினார்.  பின்பு  அரோரா தன்னை அடித்ததாக கொடுத்த புகாரையும்,  தீபக் குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கொடுத்த புகாரையும் ஏற்றுக் கொண்டு  வழக்கு பதிவு செய்தார்.   அதையொட்டி போலிசார் அவினாஷ், ஜிதேந்திரா, பங்கஜ் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளது.

இந்த கைது விவகாரம் பரேலி பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது