சென்னை:  வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் பறிமுதல் செய்யப்பட்ட ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தியின் வீடு ஏலம் விடப்படுகிறது. இதையடுத்து சீல் வைக்கப்பட்ட அந்த வீட்டில் உள்ள பொருட்களை எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என காவல்நிலையத்தில் மதுவந்தி புகார் கொடுத்துள்ளார். மனுவில்,  அந்த வீட்டில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்களை மீட்டுத் தரக் கோரியுள்ளார்.

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் பாஜகவின் செயற்குழு உறுப்பிdராக இருந்து வருகிறார். மேலும் கல்வி நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இவர் தனது தேவைக்காக, நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கி ஆழ்வார் பேட்டையில் உயர்தர மதிப்புள்ள  வீடு ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால், இந்த வீட்டுக்கான கடனை முறையாக அடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.   சில தவணைகளை மட்டும் வட்டி கட்டிய இவர் அதன் பிறகு பல மாதங்களாக நிதி நிறுவனம் தவணை பணத்தை கேட்டும் சரியான பதிலும், பணமும் கொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வங்கி அதிகாரிகள் வட்டிப்பணத்துடன் அசலையும் சேர்த்து ரூ.1,21,384 கோடி பணம் கட்ட வேண்டும் என்று நிதி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து மதுவந்தி தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த வீட்டுக்கான வட்டி பல மடங்கு உயர்ந்து, கடந்த  2021ம் ஆண்டு அக்டோபர் மாதம்,  16ம் தேதி நிலவரப்படி  கடன் நிலுவைத் தொகை ரூ. 2,02,81,223 கோடியாக  உயர்ந்தது.  இதனால், அவர் மீது வழக்கு பதிவு செய்து மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து,  மதுவந்தியின் வீட்டை ஏலத்தில் விற்பனைக்கு விடுவதாக நிதி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த வீட்டிற்கான மதிப்பு  ரூ.1 கோடியே 50லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

 இதையடுத்து சீல் வைக்கப்பட்ட அந்த வீட்டில் உள்ள சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்களை மீட்டுத் தரக் கோரி காவல்நிலையத்தில் மதுவந்தி புகார் அளித்துள்ளார்.