ஸ்ரீரங்கம்

நேற்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது.

இந்த ஆண்டு மார்ச் 10 முதல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி மாதத்தில் நடைபெறும் ஆதிபிரம்மோற்சவம் எனப்படும் பங்குனி தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.  தினசரி தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.  இதில் சிறப்பு உற்சவங்களாக 13-ம் தேதி தங்க கருட வாகன வீதியுலா, 17-ம் தேதி தங்கக் குதிரை வாகன வீதியுலா ஆகியவை நடைபெற்றன.

நேற்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவை நேற்று முன்தினம் நடைபெற்றது  நேற்று. முற்பகல் 11.45 மணிக்கு நம்பெருமாள் சேர்த்தி மண்டபத்திலிருந்து பங்குனி தேர் மண்டபத்துக்குப் புறப்பட்டு, பகல் 12 மணிக்குத் தேரில் எழுந்தருளினார்.  இதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று, 12.45 மணிக்குத் தேர் வடம் பிடிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷம் எழுப்பி தேர் வடம் பிடித்தனர்.

கீழ சித்திரை வீதியிலிருந்து தேர் புறப்பட்டு, தெற்கு, மேற்கு, வடக்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து மாலை 4.15 மணிக்கு நிலையை அடைந்தது.பிறகு  பக்தர்கள் தேரின் முன்பு தேங்காய் உடைத்தும், நெய் விளக்கு, சூடம் ஏற்றியும் வழிபட்டனர். இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியைத் தொடர்ந்து கொடி இறக்கப்பட்டது. இவ்விழாவின் நிறைவாக இன்று இரவு ஆளும் பல்லக்கு நடைபெறவுள்ளது.