சென்னை

நேற்று வைரமுத்து உள்ளிட்ட 4 கவிஞர்களின் பாடல்கள் கொண்ட கலைஞர் 100 ஒலித்தகட்டை முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டார்.

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாநிதி நூற்றாண்டையொட்டி, திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து தலைமையிலான கவிஞர்கள் குழு எழுதியுள்ள பாடல்கள் அடங்கிய ‘கலைஞர் 100 பாடல்கள்’ ஒலித்தகட்டை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன் எம்.பி., கவிஞர் வைரமுத்து உள்பட முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர். இதையடுத்து, கவிஞர் வைரமுத்து நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்-

அவர்,

”முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் 100 ஒலித்தகட்டை வெளியிட்டிருக்கிறார். அதை ஒலித்தகடு என்று சொல்வதை விட, கருணாநிதி நூற்றாண்டுக்குக் கவிஞர்கள் செதுக்கியிருக்கும் கல்வெட்டு என்று சொல்ல வேண்டும்.

நாங்கள் மொத்தம் 4 கவிஞர்கள் கவிதை எழுதியிருக்கிறோம். அதாவது கபிலன், பா.விஜய், விவேகா மற்றும் நான் (வைரமுத்து) ஆகிய 4 பேர் பாடல் எழுதியிருக்கிறோம். அந்த  பாட்டுக்கு பரத்வாஜ் இசை அமைத்திருக்கிறார். 4 பாடல்களும் கருணாநிதியின் புகழ் பாடுகிற பாடல்கள் மட்டுமல்ல, இளைஞர்களுக்கு எழுச்சி தருகின்ற பாடல்கள் ஆகும்.”

என்று தெரிவித்துள்ளார்.