டில்லி

பிஎல் 2023 நேற்றைய போட்டியில் டில்லி கேபிடல்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

தற்போது 16வது ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டம் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நேற்றைய ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் டில்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த போட்டியில் டில்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின.

போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஃபாப் டு பிளெசிஸ், விராட் கோலி இணை 10 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி ரன்களைச் சேர்த்தனர்.  பிறகு 11வது ஓவரில் ஃபாப் டு பிளெசிஸ் 45 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த மேக்ஸ்வெல் அதே ஓவரில் டக்அவுட்டானார்.

15 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த விராட் கோலியை 55 ரன்களுடன் முகேஷ் குமார் வெளியேற்ற 16 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி 137 ரன்களைச் சேர்த்திருந்தது.  அதன் பிறகு விராட் கோலி விட்டுச் சென்ற இடத்தை நிரப்பும் வகையிலான மஹிபால் லோமரோரின் 3 சிக்ஸ்களுடனான அதிரடி ஆட்டம் ஆர்சிபி ரசிகர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது.  தவிர தினேஷ் கார்த்திக் தன் பங்குக்கு ஒரு சிக்ஸை விளாசி இருப்பை பதிவு செய்துவிட்டு 11 ரன்களுடன் கிளம்பினார்.

அடுத்து வந்த அனுஜ் ராவத் சிக்சர் அடிக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 181 ரன்களைச் சேர்த்தது. மஹிபால் லோமரோர் 54 ரன்களிலும், அனுஜ் ராவத் 8 ரன்களிலும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். டில்லி அணி தரப்பில் மிட்செல் மாஷ் 2 விக்கெட்டுகளையும், முகேஷ்குமார், கலீல் அஹமத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

வெற்றி பெற 182 ரன்கள் இலக்கை துரத்திய டில்லி அணிக்கு கேப்டன் டேவிட் வார்னர் அதிரடி துவக்கம் கொடுத்தாலும், விரைவாகவே ஆட்டமிழந்தார். அணியின் பவர் பிளே முடிவதற்குள்ளாகவே 22 ரன்களில் வார்னர் தனது விக்கெட்டை பறிகொடுத்த. வார்னர்  சென்றாலும் மற்றொரு ஓப்பனர் பில் சால்ட் பெங்களூரு பந்துவீச்சை விளாசி ஆடினார்..

டில்லி அணி 10 ஓவர்களில் 120 ரன்களை எட்டிய போது மிட்சல் மார்ஷ் 26 ரன்கள் எடுத்து விக்கெட்டானர். அணியின் வெற்றிக்கு இறுதி நேரத்தில் பில் சால்ட் 45 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து உதவினார்.  ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் ரூசோவ் அதிரடியாக ரன்கள் சேர்க்க டெல்லி அணி 16.4 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ருசோவ் 35 ரன்கள் சேர்த்தார்.

இதில் பெங்களூரு தரப்பில் ஹேசல்வுட், ஹர்ஷல் படேல், கரண் ஷர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.