டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,08,03,533 ஆக உயர்ந்து 1,54,862 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 12,401 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,08,03,533 ஆகி உள்ளது.  நேற்று 120 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,54,862 ஆகி உள்ளது.  நேற்று 15,888 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,04,95,401 ஆகி உள்ளது.  தற்போது 1,48,750 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 2,736 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,36,002 ஆகி உள்ளது  நேற்று 46 பேர் உயிர் இழந்து மொத்தம் 51,215 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,339 பேர் குணமடைந்து மொத்தம் 19,48,674 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 34,862 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 6,102 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,50,812 ஆகி உள்ளது.  இதில் நேற்று 17 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,814 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,341 பேர் குணமடைந்து மொத்தம் 8,77,889 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 68,869 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 474 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,41,070 ஆகி உள்ளது  இதில் நேற்று 2 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,223 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 470 பேர் குணமடைந்து மொத்தம் 9,22,907 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,917 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 79 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,88,178 ஆகி உள்ளது  இதுவரை மொத்தம் 7,157 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 87 பேர் குணமடைந்து மொத்தம் 8,79,867 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,154 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 494 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,40,360 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,375 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 517 பேர் குணமடைந்து மொத்தம் 8,23,518 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,467 பேர் சிகிச்சையில் உள்ளனர்.