சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக வாங்கப்பட்டு வரும் அரசு பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன.  மறைந்த திமுக தலைவருக்கு பிடித்த கலரான மஞ்சள் நிறத்தில் பள்ளி, கல்லூரி பேருந்துக்ளை போல மஞ்சன் நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் புதிய பேருந்துகள் மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றன. மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான  கருணாநிதி, தனது  அங்கவஸ்தித்தை மஞ்சள் நிறத்தில் மாற்றயித்தைத் தொடர்ந்து, திமுகவினர் பலருக்கும் மஞ்சள் கலர் ஆஸ்தான கலராக மாறிய நிலையில், தற்போது அவரது மகன் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மஞ்சளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி புதிய பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் மாற்றப்பட்டு உள்ளது.

ஏற்கனவே பள்ளி, கல்லூரி பேருந்துகள் வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் உள்ள நிலையில், தற்போது தமிழ்நாடு போக்குவரத்துக் கழக பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் மாற்றப்படுவதாக, பேருந்துகளை அடையாளம் காண்பதில் சிக்கலை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் விமர்சித்து உள்ளது.

இந்த நிலையில்,  தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்துக்கு 552 புதிய தாழ் தளப் பேருந்துகள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் பயணிகளின் பேருந்து சேவையை பூர்த்தி செய்யவும் மாற்றுதிறனாளிகளின் நலனுக்காக எளிதில் பயண்படுத்தவதற்க்குரிய அனைத்து வசதிகளுடன் கூடிய 552 புதிய தாழ் தள பேருந்துகள் ஜெர்மன் வங்கி (KfW) நிதி உதவியுடன் கொள்முதல் செய்வதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வெளியிட்டுள்ள தகவலின்படி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி ரூ.500.97 கோடி மதிப்பீட்டில் 552 புதிய தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “போக்குவரத்து கழகங்களின் பேருந்துகளை மேம்படுத்திடும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு (சென்னை மாநகர போக்குவரத்துகழகம் – 352, கோயம்புத்தூர்-100, மதுரை- 100) மொத்தமாக 552 புதிய தாழ்தள நகர பேருந்துகளை மக்களின் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில் கொள்முதல் செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சிகளின் மூலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் மூலமாக வழங்கப்படும் பொதுப் பேருந்து சேவைகள் நாட்டில் முதன்மையான நிலைக்கு உயர்ந்திடும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷாப்பிங்- மெகா எலக்ட்ரானிக் டேஸ் சேல்(9th-17th Dec)லேப்டாப்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் பலவற்றில் 75% வரை தள்ளுபடி

இது ஒருபுறமிருக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மீண்டும் பயணச்சீட்டு கருவிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன.

போக்குவரத்துக் கழகங்களுக்கு தேவையான 38 ஆயிரம் பயணச் சீட்டு கருவிகளை பாரத ஸ்டேட் வங்கி இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. சோதனை அடிப்படையில் சில இடங்களில் இது செயல்படுத்தப்பட்டு பின்னர் தமிழ்நாடு முழுமைக்கும் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி மஞ்சள் துண்டு அணிவதற்கான காரணம்?

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் அடையாளமாக கருதப்படுவைகளில் கருப்புக்கண்ணாடியும், மஞ்சள் சால்வையும் அடங்கும். ஆனால், அவர் தொடக்க காலத்தில்,   வெள்ளைத் துண்டு அணியும் வழக்கமுடையவர். இடையில்தான் அவர் மஞ்சள் துண்டுக்கு மாறினார். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. மூடநம்பிக்கையின் காரணமாக கருணாநிதி இந்த வண்ணத்தில் துண்டை அணிவதாக கூறப்பட்டது.

நாத்திகம் பேசும் கருணாநிதி, ஆத்திகத்தின் விருட்சமாக மஞ்சள் கலரை தேர்ந்தெடுத்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அவர் அதற்கு முறையான பதில் தெரிவிக்கவில்லை.

மறைந்த கருணாநிதி  1994ஆம் ஆண்டுக்குப் பிறகே அவர் மஞ்சள் துண்டு அணிய ஆரம்பித்தார். 1994ஆம் ஆண்டில் அவருடைய கன்னத்தில் சிறிய வீக்கம் ஏற்பட்டது. அவருடைய உமிழ்நீர்ச் சுரப்பியில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாகவே இது ஏற்பட்டது. ஆகவே அந்தப் பகுதியை கததகப்பாக வைத்துக்கொள்ள சால்வை ஒன்றை அணிந்தால் நல்லது என மருத்துவர்கள் தெரிவித்தனர். அப்போது அவர் அணிந்த சால்வை மஞ்சள் நிறத்தில் இருந்தது.

 குறித்து பல முறை கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், ஒருமுறை,  ஓஷோ எழுதிய கவிதையை மேற்கோள் காட்டி விளக்கம் அளித்திருந்தார். அதில்,  “தன்னியல்பை ஆள்பவர் எவரோ, ஒளியும் தெளிவும் உண்மையுமானவர் எவரோ – அவரே மஞ்சளாடை அணியலாம்” என குறிப்பிட்டு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மஞ்சள் துண்டு  அவருக்கு நன்றாக இருப்பதாகவும் தனி அடையாளத்தைப் போல இருப்பதாகவும் உறவினர்களும் நண்பர்களும் கூறவே அவர் அதனைத் தொடர்ந்து அணிய ஆரம்பித்தார்.

தற்போது திமுக அரசு பல செயல்களில் மஞ்சளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மஞ்சள் மங்களத்தின் அடையாளம். மஞ்சளும் இந்துமத கலாச்சாராமும் பிரிக்கமுடியாதவை நிறங்களில் தனித்துவம் மிக்கதுமஞ்சள் நிறம்… இந்துக்களின் ஆலய ஆடை முதல் தாம்பூல தட்டுவரை மஞ்சளை பார்க்க முடியும், மஞ்சளை தொட்டுவைத்துதான் சுபகாரியங்களை தொடங்குவார்கள். அதைத்தான் கருணாநிதி பின்பற்றி வந்ததாக கூறப்பட்டது.

மேலும், மஞ்சள் நிறம், அதிகம் ஈர்ப்புதன்மை உடையது அதுதான் என்கின்றது ஆய்வு மற்ற நிறங்களை விட அது பார்ப்போரை அதிகம் ஈர்க்குமாம், தனிகவனம் பெறுமாம். அதுமட்டுமின்றி, மனிதனுக்கு தனி உற்சாகம் கொடுக்க கூடியது மஞ்சள் நிறம், உளவியல் ரீதியாக அது பெரும் சந்தோஷம் கொடுக்கும் என்றும் உளவியலாளர்கள் தெரிவித்துஉளளது.

இந்த மஞ்சள் வர்ண தத்துவத்தில்தான் உலகெல்லாம் பள்ளி வாகனங்கள் மஞ்சள் வண்ணமாகவே அறிவிக்கபட்டிருக்கின்றன‌ மற்ற நிறங்களைவிட அந்த நிறம் தனி கவனம் பெறும் என்பதால் மற்ற வாகனங்கள் எளிதில் கண்டுகொள்ளும் என்பதால் இந்த ஏற்பாடு. இந்தியா மட்டுமல்ல உலகெல்லாம் அதுதான் பள்ளிவாகன நிறம்இன்று விஞ்ஞானம் ஒப்புகொண்ட இந்த தத்துவத்தை அன்றே இந்துமதம் வலியுறுத்தி வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

அதனால்தான்  இந்துக்களின் உடையிலும் ஆலயத்திலும் ஏன் உணவிலும் கூட மஞ்சள் தவிர்க்க முடியாதது.  மஞ்சள் மனிதனுக்கு மகத்துவத்தையும் தனி உற்சாகத்தையும் கொடுக்கும், தனி ஈர்ப்பினை ஏற்படுத்தும் என்பதால்தான் இந்துக்கள் மஞ்சளை முதல் தெய்வதாக வணங்கி வருகிறார்கள். அதைத்தான் தற்போதைய திமுக அரசும் கடைபிடிக்க தொடங்கி உள்ளது.

விரைவில் அரசு பேருந்துகள், பள்ளி வாகனம், ஆட்டோக்கள் கலர் மாற்றம்! தமிழ்நாடு அரசு