நெல்லை:  தென்மாவட்டங்களில் கடந்த 24மணி நேரத்தை கடந்து பெய்து வரும் கனமழை காரணமாக,  நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், பேருந்து, ரயில் உள்பட அனைத்து வாகன சேவைகளும் ரத்து செய்யப்பட்டு, பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. நெல்லையில் உள்ள ஐகிரண்டு மருத்துவமனை வெள்ளத்தில் மிதக்கிறது.

தென்மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி வருவதை ஒட்டி தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதி நீர் இணைப்புத்  திட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் உபரிநீரை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கான சோதனை ஓட்டத்தை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி 4 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. முதலில் மிதமாக தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக மாறியது.

நெல்லை ஐகிரவுண்டு பொது மருத்துவமனை:

நேற்று அதிகாலை முதலே 4 மாவட்டங்களிலும் தொடர் மழையாக மாறி வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை காரணமாக மணிமுத்தாறு அணை, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை ரயில் நிலையம் – நெல்லை ஜங்சன் – வண்ணாரப்பேட்டை பைபாஸ் சாலை:

மேலும், பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான பால், பிஸ்கட், தண்ணீர் போன்ற பொருட்கள் கிடைக்காமல் அல்லல் பட்டு வருகின்றனர். நகர்ப்புறங்களில் அரசு உதவி செய்தாலும் பல கிராமங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளதால், அப்பகுதி மக்களும் கடுமையான துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர்,. இதற்கிடையில், மழை கடந்த 24மணி நேரத்தை கடந்து பெய்து வருவதாலும், மேலும் மழை தொடரும் என்பதாலும் பொதுமக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

சாத்தான்குளம் மழைய பேருந்து நிலையம் (காமராஜர் சிலை:

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை-குருவாயூர், திருச்சி-திருவனந்தபுரம், நாகர்கோவில்-கோவை ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாலும், பல பகுதிகளில் கடைகள் மற்றும் வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதாலும் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் தொடர் கனமழை எதிரொலி – சுமார் 1,000 தீயணைப்பு வீரர்கள் அனுப்பிவைப்பு

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடரும் கனமழையால்  118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 18 அடி உயர்ந்து 102 அடியை தாண்டியது

சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம் பகுதி:

மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து 27,848 கனஅடி, இரவு 11.30 மணி நேரப்படி 5000 கனஅடி நீர் வெளியேற்றம் அம்பாசமுத்திரம் தாலுகா சிங்கம்பட்டி, வைராவிகுளம், மணிமுத்தாறு, கல்லிடைக்குறிச்சி, ஆரடியூர், கீழ்முகம் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆற்றங்கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தென்மாவட்டங்களல் பெய்து வரும் கனமழையானது நேற்று ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 862 மிமி மழை பதிவாகி உள்ளது. அதைத் தொடர்ந்து, திருச்செந்தூரில் 673 மிமி மழையும்,  ஸ்ரீவைகுண்டத்தில் 613 மிமீ மழையும், சாத்தான்குளத்தில் 459 மிமீ ட்டர் மழையும் பாதிவாகி உள்ளது.

இந்த கனமழை காரணமாக நெல்லையில் உள்ள அரசு ஐகிரவுண்டு மருத்துவமனைக்குள் நீர் புகுந்து, நோயாளிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.  மேலும் ரயில்வே தண்டவாளங்கள், பேருந்து நிலையங்கள் வெள்ளத்தில் மிதப்பதாலும், ஆறு, கால்வாய்கள் முறையாக தூர்வாரப் படாததால், வெள்ள நீர் ஊருக்குள் புகுந்துள்ளதால், பொதுமக்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் நாளை (டிச.18) நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது.

தென்மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் மழை, வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

நெல்லை வெள்ளம் குறித்து கவனமா இருங்க மக்களே” என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது பதவில்,

குமரிக்கடல் பக்கத்திலேயே மேலடுக்கு சுழற்சி மெதுவாக நகர்ந்து வருகிறது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை தொடரும்.

செவ்வாய் கிழமை காலை வரை இதே அளவு மழை தொடர்ந்து பெய்ய வாய்ப்புகள் இருக்கிறது.

இப்போதே சில இடங்களில் 20 செ.மீ. வரை மழை பெய்துள்ளது. நாளை காலைக்குள் 30 செ.மீட்டரை தாண்டிவிடும்.

மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து போன்ற பகுதிகளில் நாளை காலைக்குள் 50 செ.மீட்டரை தாண்டிவிடும்.

தாழ்வான பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.

என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கனமழை காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல்வேறு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.  சென்னை-குருவாயூர், திருச்சி-திருவனந்தபுரம், நாகர்கோவில்-கோவை ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்வேறு ரெயில்கள் பகுதி வாரியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பாதிப்புகளை எதிர்கொள்ள  தீயணைப்புத்துறை சார்பில் பிற மாவட்டங்களில் இருந்து ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் அனுப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.  67 தீயணைப்பு வாகனங்களும், 43 படகுகளும் தயார் நிலையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.