டெல்லி: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்றும்,  நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் அடுத்த 5 நாட்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப அலைக்காக தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்  இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்றும், இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு – இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. மேலும்,  தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு இருப்பதாகவும்,  வெப்பத்தின் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாகவும் நீண்ட நேரம் வெயிலில் பணியாற்றக் கூடியவர்களுக்கு வெப்பம் தொடர்பான உடல்நலக் குறைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், வெயில் நேரத்தில் அவசியம் வெளியில் செல்ல நேர்ந்தால் தண்ணீரை உடன் வைத்துக் கொண்டு அவ்வப்போது அருந்த வேண்டும் என்றும் கூடுமானவரை 11 மணி முதல் 4 மணி வரை நேரடியாக வெயிலில் இருப்பதைத் தவிர்க்குமாறும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என்றும்,  இதன்படி கடந்த 19-ம் தேதி ஈரோட்டில் புதிய உச்சமாக 109 டிகிரி வெயில் கொளுத்தியது. நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். நேற்றைய வெப்ப நிலை அடிப்படையில் இந்தியாவில் ஆந்திராவின் அனந்தப்பூர் (111°F) முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் ஈரோடு (108°F) 8-ம் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.