எடியூரப்பா நாளை பதவி ஏற்பா…..!? வாட்ஸ்அப் மூலம் பாஜ தொண்டர்களுக்கு அழைப்பு

பெங்களூரு:

ர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைக்க பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது.

மற்றொருபுரம் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சி அமைக்க கவர்னரிடம் கோரிக்கை வைத்துள்ளது.

இந்நிலையில் 104 உறுப்பினர்களை மட்டும் வைத்துக்கொண்டு, பெரும்பான்மை இல்லாத நிலையில், நாளை பதவி ஏற்பு நடக்க இருப்பதாகவும், எடியூரப்பா தலைமையில் பாஜ அமைச்சரவை பதவி ஏற்கும் என்றும்,  பாஜக தொண்டர்கள் விழாவில் கலந்து கொள்ளுமாறும் வாட்ஸ்ஆப் மூலம் தகவல்கள் பரவி வருகிறது.

மேலும், நாளை பகல் 12.20 மணிக்கு எடியூரப்பா பதவி ஏற்பு விழா என்றும், பதவியேற்பு விழாவுக்கு வருமாறு பாஜக தொண்டர்க ளுக்கு எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ள தகவல் வாட்ஸ்அப் சமூக வலைதளம் மூலம் பரவி வருகிறது.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தகவல் உண்மைதானா அல்லது எதிர்க்கட்சிகளை குழப்ப நடைபெற்ற சதியா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Tags: Yeddyurappa sworn in tomorrow? call to bjp volunteers through whatsapp, எடியூரப்பா நாளை பதவி ஏற்பா.....!? வாட்ஸ்அப் மூலம் பாஜ தொண்டர்களுக்கு அழைப்பு