பெங்களூரு

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உரிமை கோர டில்லியின் உத்தரவுக்காக காத்திருப்பதாக பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த கர்நாடகா அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் கிடைத்ஹ்டன.  இதையொட்டி கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆளுநர் வாஜுபாய் வாலாவிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.  அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளார்.  புதிய அரசு அமையும் வரை குமாரசாமி காபந்து முதல்வராகத் தொடர்கிறார்.

காபந்து முதல்வரால் எவ்வித நிர்வாக ரீதியான முடிவும் எடுக்க முடியாது என்பதால் புதிய  அமைச்சரவை அமைய வேண்டும் என மக்கள் ஆவலுடன் உள்ளனர்.  கர்நாடக மாநில பாஜக உறுப்பின்ர்கல் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.  அந்த கூட்டத்தில் எடியூரப்பா சட்டப்பேரவை கட்சித்தலைவராகத் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

கூட்டத்துக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா. “தற்போது பாஜகவுக்கு 105 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது.  எனவே ஆட்சி அமைப்பது குறித்து டில்லியின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறேன்.   டில்லி அனுமதி அளித்த பிறகு எந்த நேரமும் ஆளுநர் மாளிகை செல்ல தயாராக உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.