அபிநந்தனை கதாநாயகனாகக் கொண்ட விமானப்படை வீடியோ கேம்

Must read

டில்லி

ந்திய  விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை கதாநாயகனாகக் கொண்ட வீடியோ கேம் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் நடத்திய புல்வாமா தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஅர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தியது. அதை ஒட்டி எல்லை தாண்டி வந்த பாகிஸ்தான் விமானப்படையைத் துரத்திச்  சென்ற விங் கமாண்டர் அபிநந்தன் ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்டார்.

உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டார். அது முதல் அபிநந்தன் பல இந்தியர்களுக்கு கதாநாயகனாக விளங்கி வருகிறார். இந்திய விமானப்படை இந்திய மக்களின் தேச பகுதியை ஊக்குவிக்கும்  வகையில் அபிநந்தனைக் கதாநாயகனாக வைத்து அமைத்த ஒரு வீடியோ கேம் ஒன்று வெளியாக உள்ளது. இது குறித்த டீசர் வெளியாகி உள்ளது.

இந்த வீடியோகேமில் ரஷ்யத் தயாரிப்பான மிக் 21 விமானம் இடம் பெற்றுள்ளது. அத்துடன் இந்த கேமில் எதிரிகளின் விமானத்தைச் சுட்டு வீழ்த்துவது, எல்லைக்குள் ஊடுருவி வெளி வருவது போன்றவை இடம் பெற்றுள்ளன. சுருக்கமாகச் சொன்னால் இளைஞர்களிடையே புகழ்பெற்று விளங்கும் பப்ஜி விளையாட்டின் இந்திய வடிவமாக இது இருக்கலாம்  என கூறப்படுகிறது.

[youtube https://www.youtube.com/watch?v=pqZd2-LAgEY]

வரும் ஜூலை 31 முதல் இந்த  விளையாட்டை ஆண்டிராய்ட் மொபைலில் தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம். தற்போது இந்த விளையாட்டு ஒருவர் மட்டுமே விளையாடும்படி அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த விளையாட்டை பலர் சேர்ந்து விளையாடும் வகையில் மாற்றி அமைக்கப்பட உள்ளது.

More articles

Latest article