இந்திய இலக்கிய உலகில் மிகவும் பிரசித்து பெற்ற எழுத்தாளர் மற்றும் சமூக சேவகி மஹாஸ்வேதாதேவி மறைந்தார்!

இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான மஹாஸ்வேதாதேவி 1926ம் ஆண்டு தாக்காவில் பிறந்தவர். இவர் தனது  துவக்கக் கல்வியை தாக்காவில் படித்தவர். இந்திய சுதந்திரத்தின்போது இவரது பெற்றோர் மேற்கு வங்கத்திற்கு குடிபெயர்ந்தனர் . கல்கத்தா பல்கலைக் கழகத்தில் பி.ஏ. ஆங்கிலம், எம்.ஏ. ஆங்கிலம் பயின்றவர்.
இவர்  100 நாவல்களையும் 20 சிறுகதைத் தொகுப்புகளையும்  எழுதியுள்ளார். மகசேசே விருது முதல் ஞானபீட விருது வரை பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவர் வங்காள மொழியில் எழுதிய ஜான்சியின் ராணியின் சரிதை நூலான “தி குயின் ஆஃப் ஜான்சி ” பின்னாளில் ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. மேலும் ருதாலி, டில் டெத் டு அஸ் பார்ட், பிரெஸ்ட் ஸ்டோரிஸ், ரைட்ஸ் இன் ஃபாரெஸ்ட் , மதர் ஆஃப் 1084, இமேஜினரி மேப்ஸ், தி ஒய் ஒய் கேர்ள் போன்ற இவரது படைப்புகள் சமூக அவலத்தை வெளிச்சம் போட்டு காட்டியவை.
m4
இவர் எழுதிய நாவலின் அடிப்படையில், அனுபம் கேர் மற்றும் ஜெ யாபச்சன் நடித்த ஹாஜர் சௌரசிகி மா எனும் திரைப்படம் வெளிவந்தது.
இவரது தந்தை மணிஷ் கட்டக் புகழ் பெற்ற கவிஞர் மற்றும் நாவலாசிரியர். இவரது தாயார் தாரித்ரிதேவியும் ஒரு எழுத்தாளர் மற்றும் சமூகசேவகர்.


1947ல் நாடகாசிரியர் பிஜன் பட்டாச்சார்யாவை திருமணம் செய்துக் கொண்டார். இவரது அண்ணன் ரித்விக் கட்டக் புகழ்பெற்ற சினிமா இயக்குனர் ஆவார்.
m2
இவரது மகன் நபருன் பட்டாச்சாரியா (68 வயது), முற்போக்கு மற்றும் நவீன கருத்துக்களை வெளிப்படுத்தும் மேற்கு வங்காள எழுத்தாளர் ஆவார்.
இவர் ஆசிரியராய் பணியாற்றி ஓய்வு பெற்றபின் முழு நேர சமூக சேவையிலும் மக்கள் பிரச்சனைகளையும்  பத்திரிக்கைகளில் எழுதி
வந்தார். 30 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சியை மேற்கு வங்கத்தில் இருந்து அகற்றியதில் இவரது போராட்டம் முக்கியப் பங்கு வகித்தது .