மத்தியப் பிரதேச மாநிலத்தில் பசுவைக் கொல்வது, அதன் இறைச்சியை உண்பதும் தண்டனைக்குறிய குற்றம். இந்த நிலையில் அம்மாநிலத்தின்  மந்த்சாவூர் நகர் ரயில் நிலையத்தில், மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முஸ்லிம் பெண்கள் இருவரைக் காவல்துறையினர் கைது செய்தார்கள். இந்தத் தகவலை அறிந்த  இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த சிலர், காவல்துறையினரின் முன்னிலையிலேயே முஸ்லிம் பெண்களை கடுமையாகத் தாக்கினார்கள்.
160728121608_beef_512x288__nocredit
தாக்கியவர்களில் நால்வரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்கள் உடனடியாக பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
அதே நேரம் பசு இறைச்சி வைத்திருந்ததாக முஸ்லிம் பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.  அவர்கள் கொண்டுவந்த இறைச்சி,  ஆய்வு செய்யப்பட்டபோது அது எருமைமாட்டுடையது என்பது தெரியவந்தது.  ஆனாலும் அந்த இரு பெண்களும் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.