மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை இன்று திருப்பிக்கொடுத்தார் மல்யுத்த சம்மேளன தலைவராக பிரிஜ் பூஷன் சிங் ஆதரவாளர் சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

பாஜக எம்.பி.யும் மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த வீரர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கடந்த ஓராண்டாக எழுந்த வந்த புகார் நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது அவரது காதுகளுக்கு மல்யுத்த வீரர்களின் குரல் எட்டியதா என்று சந்தேகம் எழுப்பியது.

இந்த நிலையில், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது பத்ம ஸ்ரீ பட்டத்தை பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டிற்கு வெளியே உள்ள நடைபாதையில் வைத்துச் சென்றதோடு அதனுடன் ஒரு கடிதத்தையும் பிரதமருக்கு எழுதியுள்ளார்.

மல்யுத்த சம்மேளன புதிய தலைவர் தேர்வு குறித்த விவகாரம் தொடர்பாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஒரே பெண் மல்யுத்த வீராங்கனையான சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் பஜ்ரங் புனியா-வும் தனது பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.