பாரிஸ்

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்தியக் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இந்தியக்  குடியரசு தின விழாவின் போது உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்களைச் சிறப்பு விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். கடந்த 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாகச் சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்படவில்லை.

இந்த ஆண்டு குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக எகிப்து நாட்டு அதிபர் அப்தெல் பதா எல் சிசி பங்கேற்றார்.  அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.

இந்தியாவின் அழைப்பை ஏற்று பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக வருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார் என பிரான்ஸ் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் பிரான்ஸ் அதிபர் அழைப்பை ஏற்று பாஸ்டீல் டே அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.