வுகாத்தி

துர்கா பூஜையை முன்னிட்டு கவுகாத்தியில் கின்னஸ் சாதனைக்காக 100 அடி உயரத்தில்  மூங்கிலால் ஆன துர்க்கை அம்மன் சிலை தயாராகி வருகிறது

ஒரிசாவில் பிஷ்னுபூர் துர்கா பூஜா கமிட்டி வருடா வருடம் நவராத்திரியை முன்னிட்டு துர்க்கா பூஜையை விமரிசையாக நடத்தி வருகிறது.  இந்த வருடம் இந்தக் கமிட்டியின் சார்பில் பிரம்மாண்டமான துர்க்கை அம்மன் சிலை மூங்கிலால் அமைக்கப்பட்டு வருகிறது.   இந்த சிலையை உருவாக்கும் குழுவில் நூருதீன் அகமது (வயது 59) தலைமையில் 40 கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இது குறித்து அகமது, “இந்த சிலை அமைப்பு பணி வரும் செப்டம்பர் 20க்குள் நிறைவு பெற்று விடும்.  இதுவே உலகின் மிகப் பெரிய மூங்கில் சிலையாக இருக்கும். சென்ற வருடம் கொல்கத்தாவில் 83 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட துர்க்கை அம்மன் சிலை பிளாஸ்டிக் இழைகளும் இரும்பும் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது.

இந்த சிலைக்கு இது வரை 4000 மூங்கில் கழிகள் உபயோகப்படுத்தப் பட்டுள்ளன.  இன்னும் சுமார் 1000 முதல் 2000 வரை மூங்கில் கழிகள் உபயோகப்படுத்த உள்ளன. இந்த சிலை அமைக்க ரூ. 11 முதல் 12 லட்சம் வரை மொத்தம் செலவாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.  அம்மன் சிலை 20 அடி அகலமும்,63 அடி உயரமும்,  அதன் பீடமும் சேர்ந்து.110 அடி உயரத்தில் அமைக்கப்படும்/

கின்னஸ் புத்தகத்துக்கு இந்த சாதனை பற்றிய தகவல் அனுப்பப்பட்டுள்ளது.  அவர்கள் ஒரு குழுவை வரும் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி கவுகாத்திக்கு அனுப்ப உள்ளனர்.  இந்த சிலையை அவர்கள் பரிசோதித்த பின் முடிவை அறிவிப்பாகள்.   இந்த சிலை நிச்சயமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என நம்புகிறோம்” என தெரிவித்தார்.

அகமது கடந்த 42 ஆண்டுகளில் 200 துர்க்கை சிலைகளை அமைத்துள்ளார்.  1975ல் அசாம் மாநிலத்தில் வடக்கு லகிம்பூரில் ஆரம்பித்த அவர் பணி இன்றும் தொடர்கிறார்.  அசாமிய திரைப்படங்களில் கலை இயக்குனராக பணி புரிந்தவர்.  ஒரு இஸ்லாமியராக இருந்தாலும் எந்த ஒரு மத வேறுபாடும் இன்றி துர்க்கை அம்மன் சிலைகளை இவர் அமைத்துக் கொடுப்பது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.