அதிகதூர விமானச் சேவை: கத்தார் நிறுவனம் சாதனை

உலகின் மிக அதிக தூரம் பயணித்த வர்த்தக விமானமான கத்தார் விமானச் சேவை நிறுவனம், தோகாவிலிருந்து-ஆக்லாந்து வரை 14,535 கிலோமீட்டர் பயணதூரம் கொண்ட விமானச் சேவையை வெற்றிகரமாக முடித்துத் திங்களன்று நியூசிலாந்தில் தரையிறங்கியது என அவ்விமானம் அறிவித்தது.
“நாங்கள் அதிகாரப்பூர்வமாக ஆக்லாந்தில் தரையிறங்கியுள்ளோம்,” என்று விமான நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. QR920 விமானம் 7.25am (உள்ளூர் நேரம்) மணிக்கு, அதாவது அட்டவணையின் படி 16 மணி நேர 23 நிமிடத்தில் வரவேண்டிய விமானம் ஐந்து நிமிடங்கள் முன்னரே வந்திறங்கியதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது. நீண்ட தூர போயிங் 777-200LR அதன் மாரத்தான் விமான பயணத்தில் 10 வெவ்வேறு நேர மண்டலங்களைக் கடந்து வந்துள்ளது.
கத்தார் ஏர்வேஸ், விமானப் பயணம் நியூசிலாந்தில் படமாக்கப்பட்ட முத்தொகுப்புகளுடைய மொத்த “லார்ட் ஆஃப் த ரிங்ஸ்” மற்றும் “ஹாபிட்” ஆகிய படங்களைவிட அதிக நேரமாக இருந்தது என்று கூறியது.

இந்த விமானத்தில் நான்கு விமானிகள் மற்றும் 1,100 கப் டீ/காபி, 2,000 குளிர் பானங்கள் மற்றும் 1,036 உணவுப் பொட்டலங்கள், 15 ஏனைய பணியாளர்கள் இருந்தனர்.

முதன்முதலாக ஒரு விமான சேவை இயக்கப்படும்போது அந்த விமானங்களை வரவேற்கும் சர்வதேச மரபைப் பின்பற்றும் வகையில், இந்த விமானம் தரையிறங்கியபோது விமானத்தைத் தண்ணீர் பீரங்கிகளால் நீரைப் பொழிந்து ஆக்லாந்து விமான மீட்பு சேவை வரவேற்றுள்ளது.
இந்தச் சாதனைப் பயணத்தின் மூலம், கடந்த ஆண்டு மார்ச் மாதம், எமிரேட்ஸ் விமான நிறுவனத்தால், உலகின் மிக அதிகதூரம் துபாயிலிருந்து ஆக்லாந்து வரை 14,200 கிலோமீட்டர் தூரம் இடைவிடாத வணிக விமானம் இயக்கப்பட்ட சாதனையைக் கத்தார் விமானசேவை நிறுவனம் முறியடித்துள்ளது.

நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் டாட் மெக்லே, இந்தப் புதிய சேவையின் மூலம், 50 மில்லியன் நியூசிலாந்து டாலர்கள் ($ 36 மில்லியன்) க்கும் அதிகமாக லாபம் ஈட்ட முடியும் என்றும், இந்த விமானத்தில் கூடுதலான சரக்கு கொள்ளளவும் உள்ளது என்றும் கூறினார்.

ஏர் இந்தியாவின் தில்லி-சான் பிரான்சிஸ்கோ விமானம் உலகின் மிக அதிக தூரம் பறக்கும் விமானம் என்று கூறிக்கொண்டாலும், பூமியின் மேற்பரப்பில் அளவிடும் போது தோகா மற்றும் ஆக்லாந்து தான் பயணதூரம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது