பாரீஸ்,

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் போலீசுக்கு எதிராக பயங்கர கலவரம் வெடித்தது. இதன் காரணமாக ஏராளமான வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த பயங்கர கலவரம் உருவானதாக கூறப்படுகிறது.

கடந்த 2ந்தேதி கைது செய்யப்பட்ட வாலிபரை போலீசார் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிய வந்ததை தொடர்ந்து,  கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஆதரவாக அவர் வசித்த பகுதியோன அல்னே-சோயுஸ்-போயிஸ் பகுதியை சேர்ந்த  மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் சித்ரவதைக்கு ஆளான அந்த வாலிபர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இளைஞரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய போலீசாரை கண்டித்து பாரீசின் புறநகர் பகுதியான ஏராளமான இளைஞர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டம் விரிவடைந்த நிலையில், திடீரென கலவரம் வெடித்தது.  4-வது நாளாக நேற்று முன்தினம் இரவில் நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதன் காரணமாக  10 வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இந்த வன்முறையில் இதில் பஸ் டிரைவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.

இந்த கலவரம் தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் வாலிபரை பாலியல் துன்புறுத்தல் புகார் காரணமாக  4 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்  வாலிபரை அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே நேற்று முன்தினம் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஏற்கனவே சென்னையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்கள் அமைதியாக போராடி வந்த நிலையில் இறுதிநாள் வன்முறை களமாக மாற்றப்பட்டது.

அதேபோலவே பாரீசிலும் போலீசால் பாதிக்கப்பட்ட இளைஞனுக்காக  போராடிய இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வன்முறை என்ற பெயரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.