வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,56,923 உயர்ந்து 89,08,556 ஆகி இதுவரை 4,66,266 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,56,923 பேர் அதிகரித்து மொத்தம் 89, 08,556 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,428 அதிகரித்து மொத்தம் 4,66,266 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 47,33,454 பேர் குணம் அடைந்துள்ளனர்.  54,503 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,388 பேர் அதிகரித்து மொத்தம் 23,30,578 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 573 அதிகரித்து மொத்தம் 1,21,980 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 9,72,941 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,571  பேர் அதிகரித்து மொத்தம் 10,70,139 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 968 அதிகரித்து மொத்தம் 50,058 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 5,43,186 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,889  பேர் அதிகரித்து மொத்தம் 5,76,952 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 161 அதிகரித்து மொத்தம் 8,002 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3,34,592 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,915  பேர் அதிகரித்து மொத்தம் 4,11,727 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 307 அதிகரித்து மொத்தம் 13,277 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,28,181 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று 1295 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 3,03,110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 128 பேர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 42,589 ஆக உள்ளது.