அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

பிரான்ஸ், பிரிட்டன், டென்மார்க், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், கிரீஸ், சைப்ரஸ், மால்டா, அமெரிக்கா, பொலிவியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடந்த இரண்டு நாட்களாக ஓமைக்ரான் பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில், “உருமாறிய கொரோனா வகைகளில் டெல்டா வகை கொரோனா பரவி வரும் அதே வேளையில் ஓமைக்ரான் பரவல் வேகமெடுத்திருப்பது இரட்டை அச்சுறுத்தலாக மாறியிருப்பதுடன் கொரோனா சுனாமிக்கு வழிவகுத்திருக்கிறது” என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் கூறியுள்ளார்.

ஓமைக்ரான் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது இது சுகாதார கட்டமைப்புகளை செயலிழக்க செய்யும் ஆபத்து உள்ளது என்று எச்சரித்த உலக சுகாதார அமைப்பு ஓமைக்ரான் பாதிப்பில் கிரீஸ், நெதர்லாந்து மற்றும் ஸ்விட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் முன்னணியில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.