ந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் பிரதமர் மோடி, ஆயுஷ் மருத்துவ நிபுணர்களிடமும் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் பாரதத்தின் பாரம்பரிய முறையான சித்த மருத்துவமுறையில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க முடியும் என பாரம்பரிய மருத்துவர்கள் பலர் அரசுக்கும், உலக சுகாதார நிறுவனங்களுக்கும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுகுறித்து ஆய்வு செய்து செய்துவந்த உலக சுகாதார நிறுவனம், மத்தியஅரசு, தமிழக அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட சித்தா மருத்துவத்துக்கும், மருத்துவர்களுக்கும் அனுமதி வழங்கி உள்ளது.

அதைத்தொடர்ந்து, கொரேனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் தப்பிக்கும் வகையில், சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி மருந்துகளும் எடுத்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, சித்த மருத்துவத்தில், நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான, கபசுரக் குடிநீர் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அற்புத மருந்துதான் கபசுரக் குடிநீர் தயாரிப்பதற்கான மருவப்பொருட்கள் அடங்கிய பொடிகளை அரசு சித்த மருத்துவமனையான இம்காப்ஸ் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனை உள்பட பல சித்தா மருத்துவமனையில்  கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சித்தா அரசு மருத்துவமனைகள் மற்றும் சித்தா மருந்தகங்களிலும் கபசுர குடிநீர் பொடிகள் விற்பனையாகி வருகின்றன.

‘‘கபம் என்ற சொல் சளியையும், சுரம் என்ற சொல் காய்ச்சலையும் குறிக்கும். சிறு குழந்தை தொடங்கி, வயதானவர் வரை என அனைவரையும் எதுவும் செய்யவிடாமல், முடக்கிவிடும் தன்மை கொண்ட கபசுரத்தைக் குணப்படுத்த உதவும் மருந்து என்பதன் பொருள்தான் இந்த கபசுரக் குடிநீர்.

நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் முக்கிய மருந்தாக கருதப்படும் கபசுரக் குடிநீர் சளி, காய்ச்சல், களைப்பு, உடல் வலி ஆகியவற்றை யும் போக்கும் திறன் கொண்டது. ஆடாதொடை இலை, சிறு தேக்கு, கரிசலாங்கண்ணி, சுக்கு, ஆடுதீண்டா பாலை வேர், பேராம்பல், மிளகு ஆகிய மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் கொண்டு இந்த கபசுரக் குடிநீர் தயாரிக்கப்படுகிறது.

இந்த நிலையில்,  சித்த மருத்துவமுறையில் கொரோனா தடுப்பு எப்படி? முழு விவரம். வெளியாகி உள்ளது. அதன் விவரம் இதோ….