சென்னை:

லைநகர் சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான கிளைகளை கொண்டுள்ள வேலம்மாள் கல்வி நிறுவனம், தனது பள்ளிகள், கல்லூரிகளில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளம் 50 சதவிகிதம்தான் தர முடியும் என்று அறிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், மத்திய மாநில அரசுகள் மார்ச் மாதம் நாடு முழுவதும் அனைத்து பள்ளிக்கல்லூரிகளுக்கு விடுமுறை விட அறிவுறுத்தியது. இதனால் காரணமாக அரசு கல்வி நிறுவனங்கள் உள்பட தனியார் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது.

இதன் காரணமாக, வேலம்மாள் பள்ளி நிர்வாகம், தனது பள்ளிக்கல்லூரிகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 50 சதவிகிதம் மட்டுமே சம்பளம் தர முடியும் என்று அறிவித்து உள்ளது.

மீதமுள்ள 50 சதவிகித சம்பளம் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வழங்குவோம் என்று தெரிவித்து உள்ளது. ஆனால், அதையும் உறுதியாக தெரிவிக்கவில்லை.

மத்திய, மாநில அரசுகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் கொரோனாவால் மூடப்பட்டா லும், அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு, விடுமுறை காலத்திற்கும் கண்டிப்பாக சம்பளம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.

அரசின் உத்தரவை ஏற்று பல நிறுவனங்கள் முன்கூட்டியே சம்பளம் வழங்கி உள்ளது. சில நிறுவனங்கள் கூடுதலாக ஒருமாதம் சம்பளத்தையும் வழங்கி, தங்களது ஊழியர்கள் வறுமையின் பிடியில் சிக்காமல் இருக்க உதவி வருகிறது.

ஆனால், அரசின் உத்தவை மீறி, வேலம்மாள் கல்வி நிறுவனம், பாதி சம்பளம்தான் தருவோம் என்று அறிவித்து உள்ளது.

மாணாக்கர்களிடம் கல்விக்கட்டணம் என்ற பெயரில் கோடிக்கோடியாக வாரி குவிக்கும் வேலம்மாள் நிர்வாகம், தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான  ஏக்கர்களை வளைத்துப்போட்டு, பள்ளிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருகிறது.  கோடி கோடியாக சம்பாதியம் செய்து வருவது.

ஆனால், அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு  சம்பளம் கொடுக்க  மறுத்து,  அதை அறிவிப்பு வாரியாக வெளியிட்டு உள்ளது. இந்த  விவகாரம் அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், ஊழியர்கள்  இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் வேலம்மாள் மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற சோதனை தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில்,  வேலம்மாள் நிறுவனம், ரூ.532 கோடி வரி ஏய்ப்பு செய்தது என்றும்,  கணக்கில் காட்டப்படாத ரூ.2 கோடி பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.