டில்லி

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து வரும் அகதிகள் குறித்த உலக நாடுகள் நிலைப்பாட்டை இங்குக் காண்போம்.

 

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதால் உலகம் முழுவதும் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   தாலிபான்களுக்கு அஞ்சி ஆப்கானில் இருந்து பலரும் தப்பி ஆயிரக்கணக்கில் வெளிநாடுகளுக்கு தஞ்சம் அடைந்து வருகின்றனர்.  இந்த அகதிகளுக்கு ரஷ்யா, மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகள் தஞ்சம் அளிக்க மறுத்துள்ளன. மற்ற நாடுகளை குறித்து இங்குக் காண்போம்

அமெரிக்கா

மெரிக்காவில் இருந்து வரும் தகவலின்படி இங்கு சுமார் 10000 அகதிகளுக்குத் தஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது.  இவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்க அரசுப் பணியில் அல்லது அரசுக்கு ஆதரவாக இருந்தவர்கள் ஆவார்கள்.   ஏற்கனவே ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஆப்கானில் இருந்து வரும் குறிப்பிட்ட சிலருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் தஞ்சம் அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.  

பிரிட்டன்

கடந்த 18 ஆம் தேதி பிரிட்டன் அரசு 20000 ஆப்கான் அகதிகளை ஏற்க உள்ளதாக அறிவித்துள்ளது.   இன்னும் 5 ஆண்டுகளுக்கு அகதிகள் இங்கு வாழலாம் எனவும் வருடத்துக்கு 5000 பேர்கள் வரை திருப்பி அனுப்பப்படுவார்கள் என பிரிட்டன் தெரிவித்துள்ளது.  அகதிகளை ஏற்பதில் பெண்கள், குழந்தைகள், மற்றும் மதிவாரியான சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கனடா

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகள் கோரிக்கை விடுத்தால் கனடாவில் ஆப்கான் அகதிகளை ஏற்பது குறித்து பரிசீலிக்கப்படும் என 20 ஆம் தேதி கனடா அரசு அறிவித்துள்ளது.   கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கான் அகதிகளுக்கு ஆதரவாகக் கனடா செயல்பட்டு வந்துள்ளது.

ஜெர்மனி

ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றிய உடனேயே அகதிகளை ஏற்பதாக அறிவித்த மேலை நாடுகளில் ஜெர்மனியும் ஒன்றாகும்.  கனடா அதிபர் ஆஞ்சலா மார்கெல் இதுவரை தங்கள் நாட்டில் சுமார் 10000 ஆப்கான்கள் தஞ்சம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியா

தற்போதைய நிலவரப்படி தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி உள்ளதால் இந்தியாவுக்கு வர விரும்புவோருக்கு அவசரக் கால விசா அளிக்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.  இதற்காக அவசரக் கால விசா திட்டத்தை இந்தியா அறிவித்துள்ளது.  ஆப்கான்களுக்கான இந்த விசாவுக்கு அனைத்து மதத்தினரும் விண்ணப்பிக்கலாம்.  இத விசாவின் ஆயுட்காலம் ஆறு மாதங்கள் ஆகும்.

மற்ற நாடுகள்

ஆப்கானிஸ்தான் எல்லை நாடான ஈரான் நாட்டில் எல்லை தாண்டி வரும அகதிகளுக்காகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.   மற்றொரு எல்லை நாடான பாகிஸ்தானில் ஆப்கான்கள் எல்லை தாண்டி வர அனுமதிக்கப்பட்டாலும் விரைவில் எல்லையை மூட உள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது.  உகாண்டா நாட்டில் அமெரிக்காவின் வேண்டுகோளுக்கிணங்க 2000 பேர் தற்காலிகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளனர்.