ண்டன்

ப்கான் விவகாரம் குறித்து விவாதிக்க இன்று பிரிட்டன் ஜி 7 நாடுகள் மாநாட்டை நடத்துகிறது.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதால் உலகெங்கும் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   புதிய தாலிபான் ஆட்சியைச் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் மட்டுமே அங்கீகரித்துள்ளன.  மற்ற உலக நாடுகள் எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் உள்ளன.  நாளை மறுநாள் இது குறித்து விவாதிக்க இந்தியாவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

மேலும் பிரிட்டன் இன்று ஜி 7 மாநாட்டை நடத்தி அதில் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளது. ஆப்கானில் இருந்து வெளிநாட்டவர் மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகிறது.   அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் இன்று 10,900 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.  கடந்த ஆகஸ்ட் 14 முதல் தற்போது வரை 53000 பேர் மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இந்நிலையில் வரும் 11 ஆம் தேதிக்குள் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும் எனத் தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.  அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் அதற்குள் வெளியேறாவிட்டால் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.