மும்பை:
களிர் ப்ரிமீயர் லீக் தொடரில், குஜராத் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில், குஜராத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 77 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. இதனால் டெல்லி அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் டெல்லி அணி, புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.

மகளிர் ப்ரிமீயர் லீக் தொடரில், இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் உத்திரபிரதேசம் – மும்பை அணிகள் மோத உள்ளன.