பெண்கள் ஹாக்கி அணி வீராங்கனை ஜோதி குப்தா தற்கொலை! பரபரப்பு

Must read

இந்தியன் ஹாக்கி அணி

ஹரியானா,

ந்திய பெண்கள் ஹாக்கி அணி வீராங்கனை ஜோதி குப்தா திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இது அணி வீராங்கணைகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானா மாநிலம் சோனிபட் நகரைச் சேர்ந்தவர்  ஜோதி குப்தா. இந்திய பெண்கள் ஹாக்கி அணியில் நட்சத்திர வீராங்கணையாக திகழ்க்கிறார்.   இமாச்சலப்பிரதேசத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்டு புதன் கிழமை ஹரியானா திரும்பினார். இந்நிலையில், ஜோதி குப்தா திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

அரியானாவில் உள்ள ஜஜ்ஜார் சாலை (jhajjar road) ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த அவர் திடீரென அந்த வழியாக வந்த  சண்டிகர் – ஜெய்ப்பூர் ரயில் முன் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

இதில் உடல் சிதறி ஜோதி குப்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More articles

Latest article